உளவுப்பிரிவு ஏட்டிடம் சண்டை போட்ட போக்குவரத்து போலீஸ் –––

உளவுப்பிரிவு ஏட்டிடம் சண்டை போட்ட போக்குவரத்து போலீஸ் –––

சென்னை மணலி பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஒருவர் விதிமுறை மீறிவந்த வாகன ஓட்டிகளிடம் கரன்சி வசூல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு உளவுப்பிரிவு போலீஸ் அதனை வீடியோவில் பதிவு செய்தார். இதனை கவனித்த போக்குவரத்து போலீஸ் ஆத்திரம் அடைந்து போய் உளவுப்பிரிவு ஏட்டிடம் செல்போனை பறித்துள்ளார். அதில் தான் லஞ்சம் வாங்கும் வீடியோவை அழித்து செல்போனையும் கீழே  போட்டு உடைத்து எறிந்துள்ளார். இது குறித்து நுண்ணறிவுப்பிரிவு ஏட்டு மணலி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறதாம்.