பெருகிவரும் சைபர் குற்றங்கள் அதிரடி காட்டும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர்...
*வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இணைய மோசடியில் ஈடுபட்ட நபரை மூன்று மாதத்தில் விரைந்து பிடித்த சைபர் கிரைம் காவல்துறையினர்*.
அரியலூர் மாவட்டம் செந்துறை காந்தி நகரைச் சேர்ந்த .முருகன் என்பவரை வெளிநாட்டு நம்பரில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2,25,000 ரூபாய் பணத்தை இணையதளம் மூலம் ஏமாற்றிவிட்டனர். இதுகுறித்து முருகன் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் அளித்த புகாரை அரியலூர் மாவட்ட சைபர் குற்ற பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி,திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்A.சரவணா சுந்தர் இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தல் படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.ரவிசேகரன் (இணைய குற்றப்பிரிவு) வழிகாட்டுதலின்படி அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.P.வாணி அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.மணிகண்டன், திரு.சிவனேசன் (தொழில்நுட்பம்), மற்றும் காவலர்கள் திரு. சுதாகர், திரு.ரஞ்சித் குமார் ஆகியோர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டது.இந்த குழு 22.11.2022 இன்று இணைய மற்றும் பணமோசடியில் ஈடுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் முடிச்சூர் மதனபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் மகேஷ் (39) என்பவரை கைது செய்தனர். மேலும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விஜயகுமார், பெரம்பலூர்.


Comments (0)
Facebook Comments (0)