திருவல்லிக்கேணி காவல் மாவட்ட தனிப்படை காவல் குழுவினர் காணாமல் போன செல்போன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு 50 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது...
திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு 50 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல், திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் செல்போன் காணாமல் போன வழக்குகளை விரைந்து விசாரணை செய்து செல்போன்களை மீட்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் கூடுதல் ஆணையாளர் அவர்கள் மேற்பார்வையில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் அவர்களின் அறிவுரையின் பேரில் மைலாப்பூர் துணை ஆணையாளர் அவர்களின் தலைமையில், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.


தனிப்படை காவல் குழுவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து செல்போன் காணாமல் போன வழக்குகளில் தொடர்புடைய 70 செல்போன்களை கண்டுப்பிடித்து மீட்டனர்.
இன்று (02.08.2022) காலை திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், இ.கா,ப அவர்கள், 50 செல்போன்களை உரிமையாளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Jpr, Chennai.


Comments (0)
Facebook Comments (0)