புகார் பெட்டி பள்ளி மாணவிகளுக்காக தமிழகத்தில் முதல் மாவட்டமாக தேனிமாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்...
தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பையும் காவல்துறைக்கும்,நீதித்துறைக்கும், கல்வித்துறைக்கும் மிகவும் சவாலாக நடந்து முடிந்த கள்ளக்குறிச்சி மாணவி இறப்பை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் நலன் மீது அக்கரையுடன் ஆரோக்கியமான சூழ்நிலைகளை உருவாக்கும் நோக்கில் பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகளை தெரிவிக்க புகார் பெட்டி திறப்பு.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகார் பெட்டி திறந்து வைககப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன், நீதித்துறை நடுவர் ராஜ்மோகன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான புகார் பெட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்கி வைத்து பேசும் போது மாவட்ட சட்ட செயலாளர் ராஜா மோகன் பேசும் போது, சட்டத்தின் மூலம் தீர்ப்பு வழங்கப்படுகிறதுஆனால் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது.தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் கள்ளக்குறிட்சி மாணவி இறப்பு பின்னர் தமிழகத்திலேயே முதன்முதலாக தேனி மாவட்டத்தில் புகார் பெட்டி தொடங்கப்படுகிறது. சீருடை அணிந்து வருவது நம்மிடையே ஏற்ற தாழ்வுகள் இல்லை என்பதை காட்டுகிறது. போக்சோ சட்டம் பள்ளி மாணவிகளுக்காக தொடங்கப்பட்டுள்ளது. மாணவிகளின் பெயரை குறிப்பிடாமல் புகார் தெரிவிக்கலாம். பாடம் நடத்தும் போது புரியவில்லை என்றால் தெரிவிக்கலாம் என்றார்.


மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் புகார் பெட்டியை திறந்து வைத்து பேசும் போது, மாணவிகளின் மனசாட்சி வெளிபடுத்தும் புகார் பெட்டி திறந்து வைப்பதை பெருமையாக கொள்கிறேன். நானும் ஒரு பெண் குழந்தையின் தந்தை என்பதை பெருமை கொள்கிறேன்.புகார் பெட்டியின் சாவி நீதித்துறையின் கையில் உள்ளது. உரிய தீர்வு காணப்படும் என்றார்.
முதன்மை கல்வி அதிகாரி செந்தில்வேல் முருகன் பேசும் போது மன கலக்கமில்லாமல், மனம் தளர்வுமில்லாமல் நடக்க வேண்டும். காரியங்களை செய்பவர்கள் காரணங்கள் சொல்ல மாட்டார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் தேனி முதன்மை குற்றவியல் நீதித்துறை நீதிபதி கோபிநாதன், தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்,தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் ராஜ் மோகன்,தேனி டிஎஸ்பி பால் சுகர்,தேனி காவல் ஆய்வாளர் வெங்கடாசலபதி,தேனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உஷா,செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கூடுதல் பொறுப்பு விஜயகுமார் மற்றும் பள்ளி மாணவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தார்கள்.
செல்வம் ,தேனி .


Comments (0)
Facebook Comments (0)