திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதிரடி நடவடிக்கை ! காணாமல் போன செல்போன்கள் ஒப்படைப்பு...

திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதிரடி நடவடிக்கை ! காணாமல் போன செல்போன்கள் ஒப்படைப்பு...

களவு மற்றும் காணாமல் போன ரூ.7,60,900 மதிப்புள்ள 51 ஆன்ட்ராய்டு  செல்போன்கள் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு. காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதிரடி நடவடிக்கை!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக நடப்பு 2021-ம்  ஆண்டில் காவல் நிலைங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்பேரில் காவல் நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

காவல் நிலைய போலீசார் செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மூலம் அதிரடி விசாரணை செய்து காணாமல் போன ரூ. 7,60,900 மதிப்புள்ள 51 ஆன்ராய்டு வகை செல்போன்களை மீட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சம்மந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களை (மனுதார்கள்) 
இன்று (31.08.2021) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்கள்.செல்போன்களை பெற்றுக்கொண்ட அனைவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு 2021-ம் ஆண்டில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக புகார் மனுக்களில் துரித விசாரணை நடத்தி  51 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், மீதம் உள்ள புகார் மனுக்கள் மீது சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சிறப்பாக பணிபுரிந்த சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் அவர்கள் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகா தேவி அவர்கள் சார்பு ஆய்வாளர் ரெய்ஹானா அவர்கள் மற்றும்  ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.

சு.பாண்டித்துரை,
திண்டுக்கல்.