பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் ரவுடிகளின் வீட்டிற்கு சென்று தீவிர சோதனை 42 க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது...

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் ரவுடிகளின் வீட்டிற்கு சென்று  தீவிர சோதனை  42 க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது...

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் செயல்பாடுகளை நேரில் சந்தித்து விசாரணை நடத்திய பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரது குழுவினர்.

        பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி* அவர்கள் உத்தரவின் பேரில்  *29.01.2023-ம்* தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் செயல்பாட்டை கண்டறியும் வகையில் *மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார், பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 30 பேர் கொண்ட தனி குழுவினர்* பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் செயல்பாடுகளை கண்டறிய அவர்கள் வீட்டிற்கு விரைந்தனர்.


     *பெரம்பலூர் நகரிலுள்ள திருநகர், சங்குப்பேட்டை, ஆலம்பாடி ரோடு மற்றும் கோனேரிப்பாளையம்* ஆகிய இடங்களில் வசிக்கும் ரவுடிகளின் வீட்டிற்கு மேற்படி குழுவினர் நேரடியாக சென்று அவர்கள் தற்போது என்ன தொழில் செய்து வருகின்றனர் எனவும், தங்களது வாழ்வாதாரத்திற்கு  என்ன செய்கிறார்கள் எனவும் கேட்டறிந்தனர். 
      *பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 42 நபர்களை கைது செய்துள்ளதாகவும், 25 ரவுடிகளின் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும், 55 ரவுடிகள் நன்னடத்தை பிணை ஆணை பெற்று திருந்தி வாழ்வதாகவும், 32 ரவுடிகள் மீது நன்னடத்தை பிணையாணை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 4 பேர் சிறையில் உள்ளதாகவும், 18 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், அந்த தலைமறைவாக உள்ள நபர்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை மூலம் 3 தனிப்படை குழு அமைக்கப்பட்டு தேடி வருவதாகவும் தகவல் தெரிவித்தார்.*
    மேலும் திருந்தி வாழும் ரவுடிகளின் வாழ்க்கைக்கு அரசால் உதவி செய்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றோம் எனவும் கூறினார்.

இந்த அதிரடி நடவடிக்கையினால் பொதுமக்கள் மத்தியில் காவல்துறை பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளனர்.

விஜயகுமார்,பெரம்பலூர்.