மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையாளர்  .T.S.அன்பு,இ.கா.ப.அறிவுரையின் பேரில், மோசடியில் ஈடுபட்ட  7 பேர் கைது...

மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையாளர்  .T.S.அன்பு,இ.கா.ப.அறிவுரையின் பேரில், மோசடியில் ஈடுபட்ட  7 பேர் கைது...

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பத்மநாபன் பாபு என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் தங்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு லோன் தருவதாகவும், லோன் பெறுவதற்கு வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் இருப்பு தொகையை வைக்கும்படியும் கூறி நம்ப வைத்து, பின்னர் வங்கி கணக்கு டெபிட் அட்டையின் ரகசிய விவரங்களை துரிதமாக பெற்றுக் கொண்டு கணக்கில் இருக்கும் தொகையினை அவரது வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்துக்கொண்டு லோன் வாங்கித் தராமல் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட பத்மநாபன் பாபு என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.K.விஸ்வநாதன்,இ.கா.ப. அவர்களிடம் புகார் கொடுத்தார். 
 இப்புகார் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மத்திய குற்றப்பிரிவிற்கு உத்தரவிட்டதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையாளர்  திரு.T.S.அன்பு,இ.கா.ப., அறிவுரையின் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் .எஸ்.ஆர்.செந்தில்குமார் மற்றும் காவல் கூடுதல் ஆணையாளர் .K.சரவணக்குமார் அவர்களின் மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வுப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.மீனப்பிரியா தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.வின்செண்ட் மற்றும் முதல்நிலைக் காவலர் திருமதி.சாந்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.


 

 

 

 

 

 

 

 

 

 

 

தனிப்படையினர் இப்புகார் மீது வழக்குப் பதிவு செய்து, மேற்படி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தொடர்பாக  விசாரணை மேற்கொண்டதில், சுமார் 70 பெண்கள் உட்பட 125 நபர்கள் கொண்ட கும்பல் மேற்படி பைனான்ஸ் நிறுவனத்தின் முகவர்கள் போலவும், போலியான சில நிறுவனங்களின் பெயரிலும் பொதுமக்களிடம் பேசியதும், இவ்வாறு சுமார் 6 மாதங்களாக ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்து பொதுமக்களை ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது. 
அதன்பேரில், தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 1.வெங்கடேஷ், ஆ/வ. 32, த/பெ.நடராஜன், கொண்டிதோப்பு, சென்னை, 2.விக்னேஷ் (எ)விக்கி, ஆ/வ.30 த/பெ.செல்வராஜ், திருமலை போஸ்ட், திருச்சி 3.பூபதி ஆ/வ.28 த/பெ.பெரியசாமி, பரமத்தி வேலூர் தாலூக்கா, 4. சதீஷ், ஆ/வ.28, த/பெ. சுப்ரமணி, சோழிங்கநல்லூர், சென்னை. 5.சார்லஸ் ஆ/வ 27 த/பெ.செல்வம், பட்டாளம், சென்னை. 6.திராவிட அரசன் ஆ/வ.25, த/பெ. ரவிச்சந்திரன், செய்யாறு, திருவண்ணாமலை, 7.கிருஷ்ணகுமார், ஆ/வ.26, த/பெ. கருப்பைய்யன், கோடம்பாக்கம், சென்னை ஆகிய 7 பேரை நேற்று (13.02.2019) கைது செய்து விசாரணைக்குப் பின்னர்   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 
மேலும் விசாரணையில், சூளைமேடு, தேனாம்பேட்டை, வடபழனி, ஆவடி, ஆலந்தூர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் “Ultra Trendz Enterprises”, “Krish consultancy”, Trifech  Associates, “Tech procers  pvt  Ltd”,  “Fortune Enterprises.” என்ற பல கம்பெனி பெயர்களில் BPO சென்டர் நடத்தி, பல்வேறு எலக்ரானிக் கருவிகளை பயன்படுத்தி வங்கியின் முகவர்கள் போல நடித்து நம்ப வைத்து பொதுமக்களை ஏமாற்றியதும், கடன் வேண்டி வங்கியை அணுகும் பொதுமக்களையும், குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. அதன்பேரில், மேற்படி இடங்களில் இயங்கி வந்த BPO சென்டர்களை சோதனையிட்டு முக்கிய ஆவணங்கள், பல்வேறு வங்கி கணக்குகளுக்கான ஆவணங்கள், பல்வேறு கம்பெனி பெயர்களில் சீல் போன்றவைகள் கைப்பற்றப்பட்டது. 
மேற்படி வழக்கில் தக்க புலன் விசாரணை செய்தும், துரிதமாக செயல்பட்டும்  குற்றவாளிகளை கைது செய்த மேற்படி மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப்பிரிவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும், இவ்வாறு லோன் தருவதாக கூறி வரும் தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.