போக்குவரத்து  தலைமைக்காவலரை பாராட்டிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் IPS..

போக்குவரத்து  தலைமைக்காவலரை பாராட்டிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் IPS..

                         சென்னை F-2 எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமக்காவலராக பணிபுரியும் R. முத்துகிருஷ்ணன் (த.கா.18787)   நேற்று (23.09.2021) காலை 10.30 மணியளவில் எழும்பூர் ,லேங்ஸ் கார்டன் ரோடு, காந்தி இர்வின் பாலம் சந்திப்பில் போக்குவரத்து  ஒழுங்குப்படுத்தும் பணியிலிருந்த போது அருகில்  சிந்தாதிரிப்பேட்டைக்கு  செல்லும் வழியில்  சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் டிரை சைக்கிளில் லோடுடன், அருகிலுள்ள பாலத்தில் ஏறுவதற்கு  மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனை கவனித்த பணியிலிருந்த போக்குவரத்து தலைமைக்காவலர் முத்துகிருஷ்ணன்  விரைந்து சென்று முதியவரின் டிரை சைக்கிளை தள்ளி பாலத்தில் ஏறுவதற்கு மனிதாபிமான முறையில் உதவி செய்துள்ளார். போக்குவரத்து தலைமைக்காவலர் முத்துகிருஷ்ணனின் இச்செயலை அங்கிருந்த வாகன ஓட்டிகள் மற்றும்  பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.  உதவி செய்த  F-2 எழும்பூர் போக்குவரத்து காவல் நிலைய தலைமக்காவலர்  முத்துகிருஷ்ணனை  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால் இ.கா.ப.,  இன்று  நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.