வாகன சோதனையில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மதிய உணவு வழங்கிய துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் ...
தமிழக அரசின் 144 ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறையில் இருப்பதால் பெரம்பலூர் நகரில் அத்தியாவசியமின்றி வெளியில் வரும் நபர்களை விசாரித்தும், வாகனங்களை பறிமுதல் செய்யும் முக்கிய பணியினை , பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஊர்க் காவல்படையினர் சிறப்பாக செயல்புரிந்து அனைத்து பகுதிகளிலும் தடுப்புகளை வைத்து தீவிரவாத வாகன தணிக்கை மற்றும் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு அறிவுரை கூறியும் வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி பணியில் ஈடுபடுவோருக்கு மதிய உணவினை வழங்க பெரம்பலூரிலுள்ள வான்புகழ் வள்ளுவன் நற்பணி மன்றம் சார்பாக பெரம்பலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன்,
*ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்* என்னும் திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்ப அவர்கள் ஏற்பாடு செய்து இன்று பணியிலிருந்த காவலர்கள் மற்றும் ஊர்க்காவல்படையினருக்கு மதிய உணவினை வழங்கினார்.
விஜயகுமார்,
மாவட்ட நிருபர்.




Comments (0)
Facebook Comments (0)