சமூக பணியில் அசத்தும் கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் மகாலெட்சுமி...
கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகமெங்கும் காவல்துறையினர் காவல் பணி மட்டுமின்றி பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் மகாலெட்சுமி பல்வேறு சமூக உதவிகளை செய்து அசத்தி வருகிறார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன். IPS., அறிவுறுத்தலின் படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஷ்வாஸ் IPS , காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் களமிறங்கிய ஆய்வாளர் மகாலெட்சுமி கொல்லங்கோடு பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள 200 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு , காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை இன்று வழங்கினார். மிகவும் நலிவடைந்த குடும்பத்தினரின் இல்லங்களுக்கு நேரில் சென்று காவல் துறையினர் உதவிகளை வழங்கியது அனைவரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர்கள் மகேஷ் , ஜெயக்குமார் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்இப்பகுதியில் ஆய்வாளர் மகாலெட்சுமியின் தலைமையில் தொடர் உதவிகள் வழங்கப்பட்டு வருவதும் கடந்த சில தினங்களுக்கு முன் தூய்மை பணியாளர்கள் 200 பேர்கள் குடும்பத்திற்க்கு உதவிகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அந்தோணி சேவியர்.,
தலைமை நிருபர்.


Comments (0)
Facebook Comments (0)