அல்லிநகர ஆய்வாளர் சேகர் 400 குடும்பங்களுக்கு உதவினார்...

அல்லிநகர ஆய்வாளர் சேகர் 400 குடும்பங்களுக்கு உதவினார்...

தேனி மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளர் சேகர் அவர்கள் தற்போது நிலவும் கொடுமையான கொரோனா வைரஸ் தொற்றில் உலக நாடுகள் அச்சத்தில் இருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழக அரசு கடைபிக்கும் 144 சட்டத்தின்படி  தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வீட்டினுள் தனிமை படுத்திக் கொண்டு தனித்திருந்து தங்களை காத்து கொண்டு மக்கள்  உணவின்றி தவிப்பதை அறிந்து தன்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ஏழை குடும்பங்களை கண்டறிந்து சமூக ஆர்வலர்கள் ,தொழில் அதிபர்கள், உதவியுடன்

சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, காய்கறிகளை வழங்கினார்.  கடமை, கண்ணியம், மக்கள் சேவையுடன் காவல் பணியினைத் செவ்வனே செய்து வரும் ஆய்வாளர் சேகர் அவர்களை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சாய் சரண் தேஜஸ்வி IPS அவர்கள் வெகுவாகாக பாராட்டினார்.