அரியலூர் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பல இடங்களில் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையன் கைது...

அரியலூர் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக பல இடங்களில் கைவரிசை காட்டிய வழிப்பறி கொள்ளையன் கைது...

அரியலூர் மாவட்டத்தில் சமீப காலங்களாக தொடர்ந்து வழிப்பறி குற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்       பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் படி, அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  மதன்  தலைமையில், உடையார்பாளையம் காவல் ஆய்வாளர்   ரவிசக்கரவர்த்தி, ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வசந்த் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் இடையக்குறிச்சியை சேர்ந்த புரட்சித் தமிழன் என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் படி அவரை விசாரணை செய்ததில், இவன்   பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, தொடர்ந்த விசாரணை செய்ததில் இவன்  உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, விக்கிரமங்கலம், அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர்  மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.  மேலும் இவன்  திருடிய 31 பவுன் நகையையும்  மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  

துரிதமாக செயல்பட்டு நகையை மீட்ட தனிப்படையினரை  மத்திய மண்டல காவல்துறை தலைவர்  பாலகிருஷ்ணன் இ.க.ப., மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்  ராதிகா இ.க.ப.,   அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதியிணை மாவட்ட காவல் அலுவலகத்தில்  வழங்கினார்...

விஜயகுமார், நிருபர்...