ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிவாரணநிதியாக வழங்கிய காவலர் பாபு...

ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிவாரணநிதியாக வழங்கிய காவலர் பாபு...

மேற்கு  மண்டல  காவல்  துறை  தலைவர் திரு. பெரியய்யா,இ.கா.ப.,  அவர்கள் கோவிட்19 பரவலை தடுப்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத (மார்ச் 2020)  சம்பளத்தை (ரூபாய் 25,788/-) வழங்கிய கோவை மாவட்ட ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் 1018 பாபு என்பவரை அழைத்து அவரது நற்செயலை பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். கோவை சரக காவல் துறை துணைத் தலைவர்    கார்த்திகேயன்,இ.கா.ப., மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்,இ.கா.ப.,  ஆகியோர் உடனிருந்தனர்.