போதை ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்திய  மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்...

போதை ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்திய  மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்...

குழந்தைகளை (special children's) ஊக்குவித்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் & காவல்துறையினர்:
75 -வது சுதந்திர தின அமுதப்பெரு விழா கலை நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்திய  மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 75 -வது சுதந்திர தின அமுதப்பெரு விழா கலை நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு குறித்து சிறப்பாக ஓரங்க நாடகம் நடித்துக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கெளதமபுத்தர் செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு உயர்நிலை பள்ளியை சேர்ந்த 11 மாணவர்களுக்கு பெரம்பலூர்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீ வெங்கட பிரியா இ.ஆ.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. மணி அவர்கள் இணைந்து மாற்றுத்திறனாளிகளாக இருந்த போதிலும் சமூக அக்கறையுடன்  போதை ஒழிப்பு குறித்த கலை நிகழ்ச்சியில் சிறப்பாக நாடகம் நடித்த மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது சுதந்திர தினத்தன்று சிறப்பாக  செயலாற்றிய கூட்டு குழலிசை வாசித்த பெரம்பலூர் மாவட்ட  ஊர்க்காவல் படையை சேர்ந்த 11 ஊர்க்காவல் படை வீரர்களூக்கு பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  மதியழகன் (தலைமையிடம்) மற்றும் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர்  சுப்பாராமன் ஆகியோர்கள் உடனிருந்தனர். 

விஜயகுமார் ,பெரம்பலூர்.