பூந்தமல்லி போக்குவரத்து உதவி ஆணையர் ஜெயகரன் வேறு மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுனர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்...

 பூந்தமல்லி போக்குவரத்து உதவி ஆணையர் ஜெயகரன்  வேறு மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுனர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்...

கடமையே கண் என ஓய்வின்றி இரவு பகல் பாராமல் அயராது உழைத்து கொண்டிருக்கும் காவல் துறையில் நகரில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சட்டம் தன் கடமையை செய்து வரும் மத்தியில் ஒரு சில இடங்களில் மனிதாபமானத்துடன் இயலாதோருக்கு உதவி கரம் நீட்டியும் வருகிறது.


சென்னை மேற்கு மாவட்டம் போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார் அவர்களின்  உத்தரவின் பேரில் சென்னை பூந்தமல்லி போக்குவரத்து உதவி ஆணையர் ஜெயகரன் அவர்களின் சீரிய முயற்சியால், மதுரவாயல் போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு சுமார் 10 நாட்களுக்கு தேவையான அளவு சமைத்து உண்பதற்க்கான அடிப்படை உணவு மற்றும் மளிகை பொருட்களை நேரடியாக அவர்கள் தங்கும் இடத்திற்கே சென்று வழங்கி அனைவரின் பாராட்டுதலையும் பெற்றனர்.

சுமார் 100 க்கும் அதிகமானோர் இந்த உதவி நிகழ்வின் போது பயன் பெற்றனர். மளிகை பொருட்கள் அனைத்தும் தங்களது போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி  ஒட்டுநர்களுக்கு வழங்கி உதவியதாக உதவி ஆணையர் ஜெயகரன் தெரிவித்தார்.காவலர்கள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்த சில இடங்களில் உத்தரவை மீருபவர்களிடம் கடுமையாக விமர்சனம் செய்து வரும் சமூக வலைதள சமூகவியாளர்களுக்கும் காவலர்களின் இத்தகைய மனிதாபிமான செயல்கள் சென்று சேர வேண்டும் என்பதே காவலர் வாய்ஸ் குழுவின் எண்ணம்.