ஆதரவற்ற 71 நபர்களை மீட்டெடுத்த பழனி நகராட்சி மற்றும் பழனி நகர் காவல்துறை...

ஆதரவற்ற 71 நபர்களை மீட்டெடுத்த பழனி நகராட்சி மற்றும் பழனி நகர் காவல்துறை...

பழனி  நகராட்சி நகர்நல அலுவலர், பழநி காவல் துறை ஆய்வாளர் உதயகுமார் , அன்னை டிரஸ்ட், சாய் கிருஷ்ணா மருத்துவமனை ரோட்டரி சுப்புராஜ், ஆகியோர் இணைந்து பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வந்த, பிள்ளைகளால் கை விடப்பட்ட ஆதரவற்றோர் மற்றும் பழனி பேருந்து நிலையத்தில் நடைபாதையில் படுத்து கிடக்கும் பிச்சைக்காரர்கள், ஆதரவற்றவர்கள், வயது முதியோர்கள், உடல்நலம் குன்றியவர்கள்  என அனைவரையும் வீடற்றவர்கள் என ஆண்கள் 57 =பெண்கள் 14, ஆக மொத்தம்  71 நபர்களை மீட்டு நகராட்சி வீடற்றோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

இவர்கள் அனைவரும் அவரவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். அதுநாள் வரை அவர்களுக்கு காலை,மாலை அல்லது இரவு நேரங்களில் தங்களது பிறந்த நாள், திருமண நாள் அல்லது ஏதேனும் சுப நாட்களில்  அன்னதானம்  மற்றும் பழனி நகர் பகுதியில் உள்ள உணவு  நிறுவனங்கள் ,ஹோட்டல், மற்றும் மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் மூலம். வீடற்றோர் இல்லத்திற்கு உதவிட வேண்டுமாய் பழநி வாழ் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புக்கு-
நகராட்சி வீடற்றோர் இல்லம். இடும்பன் இட்டார் ரோடு, அண்ணா நகர், அடிவாரம்,
அழகுபாண்டி

Annai trust 86103 6901