நெல்லையில் தீவிர வாகன தணிக்கை ...

 நெல்லையில் தீவிர வாகன தணிக்கை ...

நெல்லையில் தேர்தலை நியாயமாக நடத்த தீவிர வாகன தணிக்கை செய்யப்படும் 
 நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் ...

நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த காவல் துறை மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 15 பறக்கும் படைகள் மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 40 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. 

இந்த சூழ்நிலையில் நெல்லை மாநகர் பகுதிகளில் வாகன தணிக்கை பணிகளை இன்று மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.. 

அப்போது துணை ராணுவப் படையினரும் மாநகர காவல்துறையுடன் இணைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் கார் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்தனர் குறிப்பாக காரின் பின்பகுதியில் பணம் மற்றும் வேறு ஏதாவது பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்று சோதனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து துணை ஆணையர் சீனிவாசன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்...

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணி தொடர்பாக மாநகரை சுற்றிலும் 7 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது துணை ராணுவப் படையினர் 81 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் பதட்டமான இடங்கள் மற்றும் பிரச்சினைக்குரிய இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள். இது தவிர வாகன தணிக்கையிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர், நேரம் மற்றும் இடங்களை அவ்வப்போது மாற்றி அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளோம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் முழு அளவில் அமல்படுத்தப்படும் மாநகர காவல்துறை சார்பில் 25 இருசக்கர வாகன ரோந்து காவல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது தேர்தலை நியாயமான முறையில் நடத்த அனைத்து வழிமுறைகளையும் செய்து வருகிறோம் என்று கூறினார்.