திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் IPS கள்ளச்சாராய கும்பல்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை...

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டாக்டர் விஜயகுமார் IPS கள்ளச்சாராய கும்பல்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை...

கடந்த ஒரு மாதமாக காவல்துறை மற்றும் கலால் துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டதை தொடர்ந்து பல ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்து சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.  தொடர்ந்து வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ 5 லட்சம் மதிப்பிலான வெளி மாநில மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் IPS., தலைமையில் கிராமிய போலீஸார் விரைந்து சென்று வீட்டின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து தப்பி ஓடிய சாராய வியாபாரி ராஜ்குமார் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் வாணியம்பாடியில் வாட்சப் குழு அமைத்து மது விற்பனை செய்த இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு ஊக்கப்பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். விஜயகுமார் இ.ஆ.ப அவர்களுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாணியம்பாடி பகுதியில் கொடிகட்டி பறந்த சாராய சாம்ராஜ்யத்தை அழித்து அவர்கள் முறைகேடாக சம்பாதித்த சொத்துகளை அரசு உடமையாக்க நடவடிக்கைகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா கால கடுமையான பணிச்சுமையிலும் மக்களின் நலனுக்காக கள்ள மது விற்பனையை தடுக்கவும் பாடுபடும்  காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறைக்கு காவலர் வாய்ஸ் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

வடிவேல் சுப்ரமணியன் ,

மாவட்ட நிருபர்.