ஏட்டு கபிலன் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்...

ஏட்டு கபிலன் உடலுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்...

விருதுநகர் மாவட்டம் , ராஜபாளையம், தேசிகாபுரத்தைச் சேர்ந்தவர் ஏட்டு கபிலன் (வயது38)விருதுநகர் காவல்கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்தார்.நெல்லை மாவட்டம் , முன்னீர்பள்ளம் பகுதியில் இருதரப்பிற்கான மோதல் பாதுகாப்பு பணியில் கடந்த  10 நாட்களாக பணிபுரிந்தவர். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் போலீஸ் சரகம் கோபாலசமுத்திரம் பகுதிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த  காவலர் கபிலன் மஞ்சள் காமாலை நோய் காரணமாக  இறந்து விட்டார். அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.