ஆட்டோவில் தவறவிட்ட 6 லட்சம் மூன்று நாட்களில் உரியவரிடம் ஒப்படைப்பு..
ஆட்டோவில் தவறவிட்ட 6 லட்சம் மூன்று நாட்களில் உரியவரிடம் ஒப்படைப்பு...
தேனிமாவட்டம் ஆண்டிபட்டியருகே மாயாண்டிபட்டியை சேர்ந்த விவசாயி அம்மாவாசை. இவர் கடந்த மூன்றுநாட்களுக்கு முன்பு ஒருபையில் 74 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கான வைப்புத்தொகை சான்றுகளை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திலிருந்து ஆண்டிபட்டி வந்தார். ஆட்டோவிலிருந்து இறங்கும்போது தான் கொண்டுவந்த பையை ஆட்டோவிலேயே மறந்து வைத்துவிட்டு சென்ற அம்மாவாசை சிறிதுநேரம் கழித்து பையை தவறவிட்டதையறிந்து ஆட்டோவை தேடினார். ஆனால் கண்டுபிடிக்கமுடியாததால் அதிர்ச்சியடைந்த அவர் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார்செய்ததையடுத்து காவல்துறையினர் ஆண்டிபட்டி நகரில் ஆட்டோவை கண்டுபிடிக்க சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வுசெய்து தீவிரவிசாரணை மேற்கொண்டனர். அதேநேரத்தில் பையை எடுத்த ஆட்டோஓட்டுநர் ராயவேலூரை சேர்ந்த அழகர்சாமி 6 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் வைப்புத்தொகை பத்திரங்களை இன்று ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் ஆட்டோஓட்டுநருக்கும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தனிப்பிரிவு காவல்துறையினருக்கும் காவல்துறை ஆய்வாளர் சரவணதெய்வேந்திரன் வாழ்த்து தெரிவித்து விவசாயி அம்மாவாசையிடம் பணமும் வைப்புநிதி சான்றுகளும் ஒப்படைக்கப்பட்டது .தான் பாடுபட்டு சேர்த்து காணாமல்போன பணம் கிடைத்தததால் விவசாயி கண்ணீர்மல்க நன்றிகூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Comments (0)
Facebook Comments (0)