மத்தியமண்டல காவல்துறை தலைவர் ஆலோசனைப்படி காணாமல் போனவரை மீட்டு ஒப்படைத்த அரியலூர் மாவட்ட காவல்துறையினர்...

மத்தியமண்டல காவல்துறை தலைவர் ஆலோசனைப்படி  காணாமல் போனவரை மீட்டு ஒப்படைத்த அரியலூர் மாவட்ட காவல்துறையினர்...

மத்திய மண்டல காவல்துறை தலைவர்  V. பாலகிருஷ்ணன் I.P.S., அவர்களின் உத்தரவின்படியும், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் அவர்களின் அறிவுறுத்தல்படியும் அரியலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் K. பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் வழிகாட்டுதல்படியும்,  10-08-21 அன்று அரியலூர் ACTU பொறுப்பு காவல் ஆய்வாளர்  அனிதா ஆரோக்கியமேரி அவர்கள் காவலர்களுடன் சென்று விளாங்குடியில் உள்ள வேலா கருணை இல்லத்தை தணிக்கை செய்தபோது ACTU -வால் ஒப்படைக்கப்பட்ட 8 நபர்கள் உட்பட மொத்தம் 46 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.  

இவர்களில் அங்கம்மாள் என்பவர் தனக்கு உறவினர்கள் இருப்பதாகவும் அவர்களிடம் சேர்த்துவைக்கும்படியும் கூறியதன்பேரில் காவல் ஆய்வாளர் அவர்கள் அங்கம்மாளின் புகைப்படத்தை DCRB.  முதல் நிலை காவலர் மூலம் வாட்ஸ்அப்பில் வெளியிட்டதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் Ps Cr.no:  127/21 u/s women missing வழக்கு பதியப்பட்டு அங்கம்மாளை தேடிவந்தது தெரியவந்து காவல்நிலையத்திற்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வாலாஜாபாத் Ps  பணிபுரியும் முதல் நிலை காவலர்  மற்றும் அங்கம்மாள் உறவினர்கள் வேலா கருணை இல்லத்திற்கு வந்தார்கள் இவர்களிடம் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  விஜயகுமார் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்  அனிதா ஆரோக்கியமேரி அவர்கள் வேலாகருணை இல்லம் சென்று அங்கிருந்த அங்கம்மாளை மீட்டு அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அங்கம்மாளின் கணவர் காவல்துறைக்கு மன நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

விஜயகுமார், மாவட்ட நிருபர்.