கோவை மாவட்டத்தில் அனைத்து காவல் சரகங்களில் எந்த நேரமும் சுழற்சி முறையில் ரோந்து திட்டம்...
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எந்த நேரமும் (24×7) காவல் நிலைய சரகங்களில் சுழற்சி முறையில் (எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை) ரோந்து செல்வதற்கு ரோந்து காவலர்களை இருசக்கர வாகனத்துடன் நியமித்து அதற்கான ரோந்து முறையை (Beat System) (19.12.2022) முனைவர். முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களும் ஆயுதப்படை மைதானத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த ரோந்து திட்டம் துவக்கி வைத்ததற்கான நோக்கமே குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கும், குற்ற சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று குற்றத்தை தடுப்பதற்காகவும் இந்த ரோந்து காவல் முறை துவங்கப்பட்டுள்ளது என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
போதிவர்தன், கோவை.


Comments (0)
Facebook Comments (0)