மது போதைக்கு அடிமையான மாணவனை திருத்தி பள்ளி செல்ல உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெளிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகனான அரவிந்தன் (வயது16) என்பவர் மது போதைக்கு அடிமையாகி மதுபோதையில் கடந்தவாரம் பொதுவெளியில் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். K.S. பாலகிருஷ்ணன் BVSc., அவர்கள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சிறுவன் அரவிந்தன் மற்றும் அவர் பெற்றோரை நேரில் அழைத்து அறிவுரைகள் வழங்கி, அச்சிறுவன் படிக்கத் தேவையான அனைத்து பொருள் உதவிகளும் பண உதவிகளும் செய்து, மேலும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுடன் கலந்தாலோசனை செய்து கெஜல் நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு வேளாண்மை பிரிவு பள்ளியில் சேர்க்கப்பட்டார்.மேற்படி மது போதையில் தகராறில் ஈடுபட்ட அரவிந்தன் (22/08/2022) மனம் திருந்தி ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S. பாலகிருஷ்ணன்., BVSc, அவர்களின் தலைமையில் (22/08/2022) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 70ற்கும் மேற்பட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பது குறித்தும் அதனை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் நிர்வாகிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் CCTV கேமரா பொருத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் சட்டவிரோத போதைபொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்படுவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வடிவேல் சுப்ரமணியன் , திருப்பத்தூர்.


Comments (0)
Facebook Comments (0)