திருப்பூர் மாநகரத்தில் காணாமல் போன 108 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு...
திருப்பூர் மாநகரம், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களில் 108 செல்போன்கள் திருடப்பட்டதாகவும், காணாமல் போனதாகவும் கண்டுபிடித்துதரக்கோரி மாநகர காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. புகார்களின் பேரில் மனுரசீதுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நாட்களாக கண்டுபிடிக்கப்படாமல் இருந்த செல்போன்களை.சொர்ணவள்ளி, காவல் ஆய்வாளர், சைபர் கிரைம், திருப்பூர் மாநகரம் தலைமையில்.சையத் ரபீக் சிக்கந்தர், காவல் உதவி ஆய்வாளர், சைபர் கிரைம் மற்றும் முதல் நிலைக்காவலர்கள் சத்தியேந்திரன், மு.நி.கா.224, சந்தோஷ்குமார், மு.நி. கா.669, ஜெயக்குமார், மு.நி.கா.679,.அம்சத்குமார், மு.நி.கா.704, சக்திவேல் மு.நி.கா.301 மற்றும் காவலர்கள் சந்திரன், கா.129, நவீன்குமார், கா.977 ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. திருடப்பட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை கண்டிபிடிக்க தனிப்படையினர் நவீன தொழில்நுட்பங்களுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேற்கூறிய செல்போன்களை தற்போது வாங்கி பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து தனிபடைகாவலர்கள் மூலம் 108 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இன்று 17.08.2022. -ம் தேதி கைப்பற்றப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேற்கண்ட செல்போன்களை கைப்பற்றிய தனிப்படையினர் அனைவரையும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர்.சா.பிரபாகரன், இ.கா.ப. அவர்கள் பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
வெற்றி,வேதா,திருப்பூர்


Comments (0)
Facebook Comments (0)