தள்ளாடிய 110 வயது மூதாட்டிக்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்

தள்ளாடிய 110 வயது மூதாட்டிக்கு உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்

ஏழ்மையின் விளிம்பில் தள்ளாடிய 110 வயது மூதாட்டிக்கு நேரில் சென்று உதவிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி கிராமத்தில் 110 வயது ஆன பொன்னி என்ற மூதாட்டி தனது மூத்த மகன் கலியமூர்த்தி (75) உடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்த அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்   மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று ஒரு மாத காலத்திற்கு தேவையான அரிசி,பருப்பு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மற்றும் உடை ஆகியவற்றை பரம சாந்தி என்ற அமைப்பினர் உதவியுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்.

மூதாட்டிக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதிய தொகையை கால தாமதமின்றி விரைவாக அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த மாதத்திற்கான தொகையினை
தாசில்தார் முத்துகிருஷ்ணன் , கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் மூதாட்டிக்கு அளித்தனர்.