காவல்துறை கூடுதல் இயக்குநர், குற்றம்,மகேஸ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் முன்னிலையில் மதுரை மாவட்டத்தில் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைவஸ்துகள் அழிக்கப்பட்டது...
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகளின் மேற்பார்வையிலும், வழிகாட்டுதலிலும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த, அக்குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறியப்பட்டு அவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது செய்தும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தும், நிதி விசாரணை மூலம் அவர்களின் சொத்துகளை முடக்கியும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழகத்தில் இதுவரை 3500 சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளை முடக்கம் செய்தும், கஞ்சா குற்றவாளிகளின் 16 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்தும், மாநிலம் முழுவதும் 4000 குற்றவாளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிணைய பத்திரம் பெற்றும், சட்டப்படியான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட சட்டப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்த நிலையில், தென் மண்டல் காவல்துறை தலைவர் அவர்கள் உத்திரவின்பேரில் தென்மண்டலம் அளவிலான போதை பொருள் அழிப்பு குழு உருவாக்கப்பட்டு அக்குழுவில் 1) திண்டுக்கல் சரகம், காவல்துறை துணை தலைவர் ரூபேஸ்குமார்மீனா,இ.கா.ப., (Chairman) 2) விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர்.மனோகரன்,இ.கா.ப., (Member-1) 3) திருநெல்வேலி மாநகர துணை ஆணையாளர்.சீனிவாசன்,இ.கா.ப., (Member-2) 4) வட்டார தடய அறிவியல் உதவி இயக்குநர்.வித்யா ராணி, (Member-3) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேற்கண்ட குழுவின் தலைவர் (Chariman) அவர்கள் மேற்பார்வையில் கைப்பற்றப்பட்ட போதை வஸ்துகளை அழிப்பதற்கு நீதிமன்றத்தில் உரிய உத்திரவு பெற்று, அதன் அடிப்டையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்றும், மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை, நாகமலை புதுக்கோட்டை, அலங்காநல்லூர், சோழவந்தான், செக்காணுரணி மற்றும் சேடபட்டி ஆகிய காவல் நிலைய வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 963 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை இன்று 18.10.2022-ம் தேதி மதுரை மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட மேற்படி கஞ்சா போதைவஸ்துகளை காவல்துறை கூடுதல் இயக்குநர், குற்றம், திரு.மகேஸ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் முன்னிலையில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா, எ.முக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ராம்கி ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொழிற்சாலையில் அழிக்கப்பட்டது. மேலும் மேற்படி கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பது சம்மந்தமாக சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
Jpr,Chennai


negeve
<a href="https://www.w3schools.com">Visit W3Schools</a>