போடியில் கள்ளசாராயம் காய்ச்சிய நபர்கள், ஆய்வாளர் தர்மர் தலைமையில் கைது...
தேனிமாவட்டம் போடி தாலுகா காவல் எல்லைக்கு உட்பட்ட விசுவாசபுரம் கிராமத்தில் வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி மாட்டுக் கொட்டையில் ஊரல் போட்டு காய்ச்சி மூன்று நபர்களை போடி தாலுகா காவல் ஆய்வாளர் தர்மர் அவர்கள் போடி தனிப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் குமார் ஆகியோர் அடங்கிய 4 பேர் கொண்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு சுமார் 20 கிலோ அடங்கிய ஊரல், வடிகட்டிய 1 லிட்டர் கள்ளச்சாராயம் பாத்திரங்கள் பறிமுதல் செய்து குமரகுரு- 44 பாண்டியன் - 21 சத்தியமூர்த்தி - 23 ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர் தர்மர் தலைமையிலான காவல்துறை நபர்களை தேனிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போடி காவல்துணைக்கண்காணிப்பாளர் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.


Comments (0)
Facebook Comments (0)