அடிஉதை இல்லை வித்தியாசமான தண்டனைகள் இல்லை நெல்லை மாநகர காவல்துறை ...
அடிஉதை இல்லை வித்தியாசமான தண்டனைகள் இல்லை..
அன்பான அறிவுறுத்தலால்
சாதித்த நெல்லை மாநகர காவல்துறை ..
சாதாரண பொதுமக்களின் அழுகுரல் இல்லை..லத்தியால் தாக்கவில்லை... எவ்வித அத்துமீறலுமில்லை.. கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்களை பறிமுதல் செய்யவில்லை.. அதிக கொரானா வைரஸ் தாக்கமுமில்லை..ஆனால் எல்லாம் மிக சரியாக நடக்கின்றது, பொதுமக்களோ அதிக அளவில் ஒத்துழைப்பு தருகின்றனர். இது தமிழ்நாட்டில் நெல்லை மாநகரில் மட்டும்.. அது நெல்லை மாநகர காவல் துறையால் மட்டும்..

மத்திய மற்றும் தமிழக அரசால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்.. நிலமையை கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தமிழக காவல்துறையினர்.. கைது, தடியடி, வாகனங்கள் பறிமுதல்..தோப்பு கரணம் போன்ற சில அதிரடி நடவடிக்கைகளை கையாண்ட போதிலும்... நெல்லை மாநகர போலீசார் மேற்கொண்ட திறமையான நடவடிக்கைகளாலும்... சரியான திட்டமிடலாலும் இது வரை எவ்விதமான அசம்பாவித சம்பவங்களும் இன்று வரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் M தாமோர்..ன் நேரடி கண்காணிப்பிலும்.. உத்தரவின் பேரிலும்... நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணனின் நேரடி அறிவுறுத்தலின் படி திறமையாக செயல்படும் மாநகர போலீசாரின் வழக்குகள் இல்லாத.. விழிப்புணர்வு நடவடிக்கைகளால்... நெல்லை மாநகர பொதுமக்களும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்..


மாநகரில் செயல்படும் அனைத்து மார்க்கெட்டுக்களும் பாதுகாப்பும். சமூக விலகலும் கூடிய இடங்களுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களிடையே பூரண ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கொரானா தொற்று குறித்த விழிப்புணர்வை பேட்டை , மாநகர முக்கிய பகுதிகள் சந்திப்பு பேருந்து நிலையம் மற்றும் தச்சநல்லூர், உடையார்ப்பட்டி பகுதிகளில் மாநகர காவல்துறை சார்பாக மாநகர காவல் உதவி ஆணையர் சதீஷ் குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாநகர காவல்துறையினர் பேரணி மற்றும் ஒலிபெருக்கி மூலமாக ஏற்படுத்தி வருகின்றனர்.பாளை உதவி ஆணையர் பெரியசாமி தலைமையிலும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாநகர காவல் துறையினர் அனைத்து இடங்களிலும் கொரானா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதிரடி நடவடிக்கை இல்லாமல் சரியான அறிவுறுத்தலால் ஒட்டு மொத்த பொதுமக்களின் முழு ஆதரவோடு கொரானா வைரஸ் தடுப்பு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாநகர காவல்துறையினருக்கு தமிழ்நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Comments (0)
Facebook Comments (0)