சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை சென்னை காவல்நிலையங்களுக்கு வழங்கினார்...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை சென்னை காவல்நிலையங்களுக்கு வழங்கினார்...


சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளுக்கு 280 இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை (Blood Pressure Machine) வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படி, சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து Tanker Foundation அமைப்பினர் சென்னை பெருநகர காவல்துறைக்கு இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை (Blood Pressure Machine) வழங்க முன்வந்தனர்.

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள், இன்று (13.09.2022) காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் ஆளிநர்கள் தங்களது உடலின் இரத்த அழுத்தத்தை தாமே பரிசோதித்து கொள்ள வசதியாக சென்னை பெருநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளுக்கும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் (Blood Pressure Machine) வழங்கும் அடையாளமாக, மேற்படி Tanker Foundation அமைப்பினர் முன்னிலையில், 280 இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் வழங்கினார்.

இந்த இரத்த அழுத்த பரிசோதனை கருவி (Blood Pressure machine) மூலம், காவல் ஆளிநர்கள் தங்களது இரத்த அழுத்த நிலையை அன்றாடம் பரிசோதித்துக் கொண்டு. உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும். குறைபாடுகள் ஏதேனும் கண்டறிந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு தங்களது உடல்நிலையை பாதுகாக்கவும் பயன்படும் என காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., துணை ஆணையாளர் (நிர்வாகம்) திரு.ராமமூர்த்தி, Tanker Foundation அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜார்ஜி ஆப்ரஹாம். இவ்வமைப்பின் நிர்வாகிகள். காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Jpr,Chennai