ஆதரவற்ற மக்களுக்கு வீடு தேடி உணவு பார்சல் வழங்கிய சிறப்பு போலீஸ் அதிகாரி ஆடிவேல்...

ஆதரவற்ற மக்களுக்கு வீடு தேடி உணவு பார்சல் வழங்கிய  சிறப்பு போலீஸ் அதிகாரி ஆடிவேல்...

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தற்போது கொரோனா வைரஸ்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், அது மேலும் பரவாமல் தடுக்க நகர் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதால் அனைத்து பொது மக்களும் வெளியில் வராமல் பாதுகாப்பாக வீட்டின் உள்ளே இருக்க நகராட்சி, காவல் துறை அதிகாரிகள் இணைந்து  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த முழு ஊரடங்கால் ஆதரவற்ற முதியோர்கள்,விதவைகள், மாற்றுதிறனாளிகள், தினக்கூலிகள், பசியால் வாடி வந்தனர், இது குறித்து தன்னார்வ தொண்டர்கள் சிறப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேலுக்கு தகவல் தெரிவித்தனர், அவரது முயற்சியில் வீட்டீல் முடங்கியிருக்கும் பசியால் வாடும் முதியோர்கள் ,கூலி வேலைக்கூட போகமுடியாதவர்கள், நகராட்சி அனைத்து வார்டு பகுதியில் உள்ள 750 பேர்கள் போலீஸ் அனுமதியுடன் கண்டறிய பட்டு அவர்களுக்கு உணவு வழங்கபட்டு வருகிறது.

இந்ந தகவல் அறிந்ததும் 
புளியங்குடி அரசுமருத்துவமனை அருகில் உள்ள ஓம் ஸ்ரீ முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவில் நிர்வாகத்தை சார்ந்த குருநாதர் சக்தியம்மா சார்பில் ஆதரவற்ற பயனாளிகளுக்கு 750 நபருக்கும் மூன்று வேலையும் உணவளிக்க ரூபாய் 37500/= (முப்பத்தி ஏழாயிரம்) புளியங்குடி போலீஸ் சிறப்பு அதிகாரியிடம் ஓப்படைக்க பட்டது. வழங்கப்பட நிதியிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுபார்சலை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு சிறப்பு  அதிகாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வீடு தேடி ஒவ்வொரு நபருக்கும் வழங்கினார். இதில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோயில் தலைவர் முருகையா, பாலசுப்பிரமணியன், மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த பேரிடர் காலத்தில் முழு ஊரடங்கால் அன்றாட உணவின்றி பாதிக்கப்பட்டு வரும் புளியங்குடி மக்களுக்கு உணவு வழங்கிட தன்னார்வமுள்ள நன்கொடையாளர்கள்  தொடர்பு கொள்ள வே
ண்டிய புளியங்குடி போலீஸ் நிலைய போன் நம்பர்+91 861 078 7940 ரில் தொடர்பு கொள்ளவும்.