நீலகிரியில்காவல்துறை மீது பொதுமக்கள் அதிருப்தி சீசனை முன்னிட்டு ஒருவழிப்பாதை ஏற்பாடு ...
நீலகிரி மாவட்டத்தின் பிரதான போக்குவரத்து சாலையான குன்னூர் மேட்டுப்பாளையம் சீசனை முன்னிட்டு 45 நாட்கள் ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போக்குவரத்து மாற்றம் நீலகிரி மாவட்டத்தின் மொத்த பொருளாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது என்பதே உண்மை.உதாரணமாக லாரிகள் கோத்தகிரி சுற்றி வருவதாலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவதாலும் அனைத்து பொருட்களின் விலையும் சாதரண விலையை விட அதிக விலைக்கு விற்கப் படுகிறது,காரணம் கேட்டால் லாரிகள் சுற்றி வருவதால் வாடகை அதிகமாகிறது என்று காரணம் கூறப்படுகிறது.குன்னூர் நகர் பகுதியில் நடைபெறும் பண்டிகை காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது.இந்த சமயத்தில் குன்னூர் லெவல் கிராஸிங் பகுதியில் வாகனங்களை திருப்பி விடுவதால் ஏற்படுகிற குளறுபடி சொல்லிமாளாது.இதனால் சிறு நகரமான குன்னூர் பகுதி சாலைகள் முழுவதும் போக்குவரத்து சிக்கல் ஏற்படுகிறது.இதனால் உள்ளூர் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.தேயிலை தொழில் நலிவடைந்துள்ள நிலையில் உள்ளூர் மக்களின் மூலம் வருமானம் இல்லாத நிலையில் இந்த இரண்டு மாத சீசன் வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் குன்னூர் பகுதி வியாபாரிகள் பெரும் வணிக இழப்பை அடைந்துள்ளனர்.மஞ்சூர் வரை உள்ள கிராம பகுதியினர் சமவெளி பகுதிக்கு சென்று வர நீண்ட தூரம் சுற்றி வருவதால் பெரும் பொருட் செலவும் கால விரயமும் ஏற்பட்டு இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் சாலை பெரும் பொருட் செலவில் சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்கள் இரு புற போக்குவரத்துக்கு மிகவும் ஏற்ற சூழ்நிலையே உள்ளது.அதுவுமின்றி சீசன் சூடு பிடிக்காத ஏப்ரல் மாதங்களில் மேலே வரும் வாகனங்களும் குறைவு,கீழ் நோக்கி செல்லும் வாகனங்களும் அனுமதிக்கப்படாத நிலையில் சாலை பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்படுகிறது.
மேலும் கடந்த 120 வருடத்தில் எந்த அதிகாரிகளும் இது போல அறிவிப்பு வெளியிட்டது இல்லை. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, உள்ளூர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் நாட்களில் சனி ஞாயிறு தவிர பிற நாட்களில் இரு புற போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி ஆவண செய்ய பொது மக்கள் சார்பாக காவலர் வாய்ஸ் கோரிக்கை வைக்கிறது..


Comments (0)
Facebook Comments (0)