கர்ப்பிணி பெண் காவலரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிய உதவி ஆய்வாளர்...

கர்ப்பிணி பெண் காவலரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிய உதவி ஆய்வாளர்...

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் இன்று ( 17-08-2020 )  யூனியன் ஆபீஸ் காப்பு பணிக்கு ஆய்வுக்கு சென்ற ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் அவர்கள் காப்பு பணியில் இருந்த பெண் காவலர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை கண்டார்.  அந்தப் பெண்ணிடம் விசாரித்து உங்களுக்கு ஓய்வு வேண்டுமென்றால் ஆயுதப்படை  சென்று ஓய்வு வாங்கிச் செல்லுமாறு சொன்னதின் பேரில் சம்பந்தப்பட்ட பெண் காவலர் ஆயுதப்படை சென்று பெருமாள் பெயரை கொண்ட உதவி ஆய்வாளர்  அவர்களிடம் தான் கர்ப்பமாக உள்ளதால் எனக்கு சீருடை அணியாமல் கர்ப்ப காலத்தில் பெண்கள் சேலை கட்டி பணிசெய்ய பர்மிஷன் வேண்டும் என்று கேட்டுள்ளார் .

அதற்கு பணியிலிருந்த பெருமாள் பெயரை கொண்ட உதவி ஆய்வாளர் அவர்கள் உனக்கு வழங்கும் பயணப்படி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கான ETR ஆகியவற்றை வேண்டாம் என்று எழுதிக் கொடு உனக்கு சேலை கட்டி பணிசெய்ய பர்மிஷன் வழங்குகிறேன் என்று சொல்ல மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார் அந்த பெண் காவலர் . மேலும் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் அரசு ஒதுக்கீட்டுக்கு மாறாக தலைமை காவலர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளனர் .தலைமை காவலர்ளை பணி வாங்க முடியாத நிலையில்  இரண்டாம்நிலை காவலர்களை அதிகப்படியான பணிகளுக்கு தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இரண்டாம் நிலை காவலர்களுக்கு எந்தவித நலன்சார்ந்த நடவடிக்கைகளையும் சரியாக ஓய்வு விடுப்பு  வழங்காமல் செய்து வருகிறார்.  

இதனால் காவலர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர் முதலில் இதுபோன்ற அதிகாரிகளுக்கு பணி செய்ய சரியாக பயிற்சி கொடுப்பது அவசியமான ஒன்றாகும். கூடுதல் தகவல் கடந்த மாதம் இறுதியில் பெருமாள் பெயரை கொண்ட எஸ்.ஐ திருச்சி மாவட்டம் சிறைத்துறை பயிற்சி பள்ளி பணிக்கு அனுப்பி வைத்தார்கள் அங்கு இவருடைய நடத்தை சரியில்லை என்று திருப்பி அனுப்பி வைத்தார்கள்.நேற்று விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலர் துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டதை போல பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் எதுவும் நடப்பதற்கு முன்பு திருச்சி சரக DIG ஆனிவிஜயா அவர்களும் பெரம்பலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவலர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.