கொள்ளையடித்தே கோடீஸ்வரனான கொடூர கொள்ளையன் மோகர்சிங்: வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்...

கொள்ளையடித்தே கோடீஸ்வரனான கொடூர கொள்ளையன் மோகர்சிங்: வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்...

கொள்ளையடித்தே கோடீஸ்வரனான கொடூர கொள்ளையன் மோகர்சிங்: வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்...

ரயில் கொள்ளையன் மோகர்சிங் கொள்ளையடித்தே கோடீஸ்வரன் ஆனதாகவும், அவனுக்கு மத்திய பிரதேசத்தில் சொந்தமாக 8 வீடுகளும், 200 ஏக்கர் நிலமும் இருப்பதாகவும் ‘பகீர்’ தகவல்கள் ‘சிபிசிஐடி’ போலீசார் விசாரணையில் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் போலீசில் ஒருவர் சிக்கினால் அடுத்தவர் அவரை காட்டிக் கொடுக்க கூடாது என்றும், பெண் தெய்வம் 

முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்வதும், காட்டிக் கொடுப்பவருக்கு மரண தண்டனை விதிப்பதும் கொள்ளையன் மோகர்சிங் 

ஊரில் எழுதப்படாத சட்டம் என்பன போன்ற அதிர்ச்சித் தகவல்களை போலீசார் தரப்பில் வௌியிட்ட போது கேட்ட நமக்கும் அதிர்ச்சி தொற்றிக் கொண்டது.
 

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படும் சுவாரஷ்யமான தகவல்கள் வருமாறு:–

 ம.பி. மாநிலம், குணா மாவட்டத்தில் உள்ள கெஜ்ராசாக் என்ற கிராமம்தான் மோகர்சிங் பிறந்த ஊர். இந்த ஊர் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு பிறந்த மக்கள் ‘பார்தி’ இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் தொழில் திருடுவது, கொள்ளையடிப்பது, கொலை செய்வது. 15வயது முதல் தங்கள் பிள்ளைகளை திருட்டுத்தொழிலுக்கு பழக்குகின்றனர். சமையல் சாமான்கள் கத்தி, அகப்பை போல இவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நீள வடிவிலான எஸ்எல்ஆர் துப்பாக்கி வைத்திருப்பார்களாம். கெஜ்ராசாக் கிராமத்தில் வாழும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மோகர்சிங் ஒரே தலைவன். இவனுக்கு 2 மனைவிகள், 7 பிள்ளைகள். மோகர்சிங்குங்கு சொந்தமாக அந்த கிராமத்தில் 200 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கிராமத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் விதமே தனி ஸ்டைலாம். மாப்பிள்ளை இதுவரை எத்தனை கொள்ளைகள் அடித்துள்ளார். அதில் எத்தனையில் போலீசில் சிக்கியுள்ளார். போலீசில் சிக்காமல் இருந்தால்தான் அவருக்கு பெண் கொடுக்க முன்னுரிமை அளிப்பார்கள். பத்து கொள்ளையில் ஒன்று இரண்டில் மட்டுமே சிக்கியிருந்தால் பரவாயில்லை. பத்து கொள்ளைகளிலும் போலீசில் பெயர் தெரியும் அளவுக்கு இருந்தால் அந்த மாப்பிள்ளை திருமணம் செய்ய தகுதியற்றவர்.

கொள்ளைக்கு செல்வதற்கு முன்பு அந்த கிராமத்தில் உள்ள ஒரு பெண் தெய்வத்துக்கு பூஜை, படையல் போட்டு வணங்கி சத்திய பிரமாணம் செய்த பின்னர்தான் மோகர்சிங் தனது சகாக்களுடன் கொள்ளைக்குப் புறப்படுவான். சென்னை ரயில் கொள்ளையை நடத்துவதற்கு முன்பும் பூஜை போட்டுள்ளனர். இவர்கள் போடும் கொள்ளை அனைத்தும் கோடிக்கணக்கில்தான். கும்பலில் ஒருவர் போலீசில் சிக்கினாலும் மற்றவரை காட்டிக் கொடுக்க கூடாது. அப்படி காட்டிக் கொடுத்தால் அவர் ஜாமினில் வெளியே வந்த பின்னர் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிடுவார்கள். அவரை வெட்டிக் கொலை செய்து விடுவார்களாம். கெஜ்ராசாக் கிராமத்தில் இது மோகர்சிங்கால் விதிக்கப்பட்ட எழுதப்படாத சட்டமாம். சென்னையில் கொள்ளையடித்த பின்னர் அந்த பணத்தை மூட்டை கட்டி ரயிலில்தான் கொள்ளையர்கள் கொண்டு சென்றுள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக குணா மாவட்டத்தில் இட்லி கடை போட்டு வியாபாரம் செய்துள்ளனர். தள்ளுவண்டியில் கிழங்கு வகைகளை கூவி கூவி விற்று வந்துள்ளனர். சிபிசிஐடி போலீசாரும் இட்லி வியாபாரி போல மாறுவேடம் போட்டு தலைமறைவாக உள்ள மோகர்சிங்கின் கூட்டாளிகளை வளைத்துப் பிடிப்பதில் மத்திய பிரதேசத்தில் இரவும் பகலுமாக போராடி வருகின்றார்களாம். கொள்ளை போன ரூ. 5.78 கோடியை எப்படியும் மீட்டாக வேண்டும் என்பதில் தனிப்படையை தானே நேரில் மேற்பார்வையிட்டு இயக்கி வருகிறாராம் சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அமரேஷ் பூஜாரி.