நெல்லை மாநகர காவல்துறை அதிரடி

நெல்லை மாநகர காவல்துறை அதிரடி

I400 Kg தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  பறிமுதல் இருவர் கைது.

நெல்லையில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில்,அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும்  புகையிலை பொருட்கள்1400 Kg பிடிபட்டுள்ளது.

நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆய்வாளர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி பொதிகை நகர் பகுதியில் உள்ள கடையில் I400 கிலோ குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை  பறிமுதல் செய்து இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு 12 லட்சம் ஆகும்.

நெல்லை மாநகரின் முக்கிய பகுதியில் மிக பெரிய அளவிலான புகையிலை பொருட்கள் காவல் துறையின் அதிரடி நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.