நெல்லை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS காவலர்களுக்கு எச்சரிக்கை...

நெல்லை காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS காவலர்களுக்கு எச்சரிக்கை...

நெல்லை காவலன்
இரு சக்கர ரோந்து வாகனம்
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS தொடங்கி வைத்தார்.



நெல்லை மாவட்ட பொதுமக்களின் அவசர உதவிக்காக 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நெல்லை காவலன் என்ற இரு சக்கர ரோந்து வாகன திட்டத்தை
நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்னன் IPS தொடங்கி வைத்தார்.

நெல்லை காவலன் திட்டத்தின் மூலமாக மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் அவசர உதவி கோரும் பொதுமக்களுக்கு மிக துரிதமாக உதவும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய பகுதிகளுக்கும்,விபத்து போன்ற அவசர உதவிகளுக்கும் நெல்லை காவலன் ரோந்து வாகன காவலர்கள் செல்ல முடியும் என்று Sp மணிவண்ணன் அவர்கள் பேசினார்.

மேலும் காவலர்கள் யோகா போன்ற உடற்பயிற்சி செய்து உடல்நலம் காத்திடல் அவசியம், பணி நேரத்தில் கண்டிப்பாக சீருடையில் இருக்க வேண்டும்.சீருடையை விரும்பி ஈடுபாடுடன் பணி செய்ய வேண்டும் தங்களது காவல் எல்லைக்குள் ரவுடிசம் எந்த இடத்திலும் இருக்கக் கூடாது. சட்டம் ஒழுங்கு முறையாக கவனிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை விடுத்து காவலர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.


நாங்குநேரி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் காவல் துணை கண்காணிப்பாளர் ஶ்ரீலிஷா ஸ்டெபிலா தெரஸ் , வள்ளியூர் காவல் துணை கண்காணிப்பாளர் உதய சூரியன் ,நாங்குநேரி காவல் ஆய்வாளர் சபாபதி மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவல ர்கள் கலந்து கொண்டனர்.