விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நெல்லை மாவட்ட காவல் துறையினர்...

விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நெல்லை மாவட்ட காவல் துறையினர்...

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் தடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாவட்ட காவல் துறையினர்...

திருநெல்வேலி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி திருநெல்வேலி மாவட்ட வி.கே.புரம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்கள் தலைமையில் போலீசார் அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய இடங்களுக்கு சென்று  தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டியபாதுகாப்புமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளையும், முகக்கவசத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறியும், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கி பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முழுமூச்சாக செயல்பட்டு தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.