தேனி மாவட்டம் காவல்துறை சார்பில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்...

தேனி மாவட்டம் காவல்துறை சார்பில்  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்...

தேனி மாவட்டம் காவல்துறை சார்பில்  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இதில் பொதுமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் திருங்கைகளுக்கு முக கவசங்கள், கிருமிநாசினிகள், மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதில்  கிராமப்புற தவில் கலைஞர்களின் இசையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன், தேனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப் பாளார் முத்துராஜ், நாடார் சரஸ்வதி கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரியின் செயலாளர் ராஜமோகன், அமைப்பு சாரதிருநங்கைகள் ஏராளமானோர்கள், பல்வேறு துறைசார்ந்த அமைப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் இதில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.