3 மணி நேரத்தில் திருடு போன கார் கண்டுபிடிப்பு நெல்லை மாநகர காவல்துறை சாதனை...
3 மணி நேரத்தில் திருடு போன கார் கண்டுபிடிப்பு, குற்றவாளி கைது நெல்லை மாநகர காவல்துறை சாதனை..
நெல்லையில் திருடு போன காரை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து , காரை திருடிய குற்றவாளியை கைது செய்துள்ளனர் நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார்,
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் சொகுசு கார் திருடு போனதாக கொடுக்கப்பட்ட புகாரை.. டவுண் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராஜீ தலைமையில், தச்சநல்லூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் முஹைதீன் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து காரை திருடிய அப்துல் ரஹ்மான் என்பரை கைது செய்து, 10,00,000 /- மதிப்புள்ள சொகுசு காரை பறிமுதல் செய்துள்ளனர்
3 மணி நேரத்தில் மிக விரைவாக செயல்பட்டு திருட்டு போன காரை கண்டுபிடித்த
நெல்லை மாநகர காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Comments (0)
Facebook Comments (0)