காவலர்களுக்கு மூலிகை தேனீர் வழங்கிய திண்டுக்கல் சரக காவல்துறைத் தலைவர் முத்துச்சாமி IPS ...

காவலர்களுக்கு மூலிகை தேனீர் வழங்கிய திண்டுக்கல் சரக காவல்துறைத் தலைவர் முத்துச்சாமி IPS ...

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் திண்டுக்கல் சரக காவல்துறைத் தலைவர் முத்துச்சாமி IPS ., அவர்களால் கொரோனா நோய் தடுப்புமுறைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்று 28.04.2021 மாலை 6 மணியளவில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட கம்பம் நகரில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி IPS, அவர்கள் மற்றும் கம்பம் சித்த மருத்துவர் கலையமுதன் அவர்கள் முன்னிலையிலும் முத்துச்சாமி IPS அவர்கள் சித்த மருத்துவ மூலிகை தேனீர் வழங்கி துவக்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியை உத்தமபாளையம் DSP சின்னக்கன்னு, கம்பம் வடக்கு ஆய்வாளர் சிலை மணி ஆகியோர் இந்த நிகழச்சியினை  சிறப்பாக ஏற்பாடு செய்தார்கள் இன்று வழங்கிய கொரோனா மூலிகை தேனீரில் மஞ்சள், சுக்கு, அதிமதுரம், சித்தரத்தை, கடுக்காய், ஓமம், கிராம்பு, மிளகு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்த மூலிகை தேனீர்ரானது கொரோனாவின் வீரியத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று சித்த மருத்துவர் கலையமுதன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் முத்துச்சாமி IPS அவர்கள் கொரோனா நோயின் தாக்கத்தில் இருந்து எவ்வாறு தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்று சிறப்புரையாற்றினர். இதில்தான் சந்தித்த பல்வேறு அனுபவங்களையும் தான் எதிர்கொண்ட சூழ்நிலைகளையும் தனக்கே உரிய பாணியில் சிறப்பாக எடுத்துரைத்து காவலர்கள் எவ்வாறு தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள வேண்டும் தன் குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களுடன் எவ்வாறு பழக வேண்டும் இயலாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் மற்றத்துறையினர்களுடன் இணைந்து சிறப்பாக பணி செய்து கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்று சிறப்பாக எடுத்துரைத்தார் இவரைத் தொடர்ந்து தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி அவர்கள் காவல்துறையினர்களுக்கு மாவட்டத்தில் உள்ள காவலர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தன்னுடைய சிறப்பு அறிவுரைகளையும் இந்த நிகழ்ச்சியில் கழந்துகொண்டவர்களுக்கு நன்றியினையும் பாராட்டுகளையும் மக்கள் பணி செய்யும் பிறத்துறை சார்ந்தவர்களுக்கும் நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார் .

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டு மூலிகை தேனீர் பருகி பயன்பெற்றார்கள்.