வேலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்...

வேலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்...

அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று (24-05-2021) முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் வேலூர் மாநகரம் முழுவதுமாக காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வேலூர் மாநகரத்தின் பல்வேறு முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து நெறிப்படுத்த பட்டு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதோடு தேவையின்றி வெளியில் சுற்றி வருபவர்களை  கண்டித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே கொரோனா நோய் தோற்று தீவிரத்தை உணர்த்துவதோடு தேவையின்றி வெளியில் சுற்றி வருபவர்களை கட்டுக்குள் கொண்டு என்ற நம்பிக்கையை விதைக்கிறது.

ரா. மதன் ராஜ்
 நிருபர்...