காவலர்கள் நடித்த காவலன் SOS குறும்படம் மாநகர காவல் ஆணையாளர் & துணை ஆணையாளரும் வெளியிட்டனர்...
Safety உங்கள் Choice
காவலன் SOS குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடமும், பெண்களிடமும். கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரிடையே ஏற்படுத்த நெல்லை மாநகர காவல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கல்லூரிகள், பள்ளிகள் , பொதுமக்கள் கூடும் பிரபல வணிக நிறுவனங்களில் மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் மற்றும் மாநகர காவல்துறையினர் SOS செயலி குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகின்றனர்.
SOS குறித்த விழிப்புணர்வை அடுத்த நகர்விற்கு எடுத்து செல்லும் பெரு முயற்சியாக நெல்லையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காவல் துணை ஆணையர் மற்றும் நல்லதை பகிர்வது நம் கடமை என்ற வாட்ஸ் அப் குழுவினரும் இணைந்து Safety உங்கள் Choice என்ற விழிப்புணர்வு குறும் படத்தை தயாரித்து உள்ளனர்.

இன்றைய சூழலில் முழுக்க முழுக்க பெண்களின் பாதுகாப்பு மற்றும் காவலன் SOS..ன் அவசிய தேவை குறித்தும் குறும்படம் எடுத்துரைக்கிறது.. படத்தில் நிஜ காவலர்களே நடித்து உள்ளனர்.
இதன் வெளியீட்டு விழா இன்று நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது.திருமதி அனுராதா ராமேஷ் முன்னிலை வகிக்க நல்லதை பகிர்வது நம் கடமை குழுவின் மூத்த உறுப்பினர் பரமேஸ்வரன் வெளியிட ,நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் டாமோர் IPS பெற்று கொண்டார்.
மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் SOS குறித்த விழிப்புணர்வுகளையும், குறும்படத்தில் பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

நெல்லை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி, எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கணபதி சுப்ரமணியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.மாவட்ட அறிவியல் மைய இயக்குநர் முத்துகுமார், தொழிலதிபர் லயன் பெத்துராஜ், ரஜினி மக்கள் மன்றம் சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை மாநகர காவல்துறை மற்றும் குறும்பட இயக்குநர் மு.வெ.ரா, ஒளிப்பதிவாளர் சிகாமணி, எழுத்தாளர் சுரேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.காவலன் SOS மற்றும்,பெண்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளும் காவல் துணை ஆணையர் சரவணின் இந்த வித்தியாசமான முயற்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.



Comments (0)
Facebook Comments (0)