குடிபோதையில் காவலர்களை மிரட்டும் வழக்கறிஞர்...

குடிபோதையில் காவல் நிலையத்தில்  தகராறு செய்யும் வழக்கறிஞர்

வாகன சோதனையின் போது குடிபோதையில் பிடிபட்ட வழக்கறிஞர்  ஒருவர்.. தன் மீது வழக்கு பதிவு செய்த பெண் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் வள்ளியம்மாள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த வழக்கறிஞர் பூபதி மீது வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது

இதனால் ஆத்திரமடைந்த  வழக்கறிஞர் பூபதி காவலர்களையும் உதவி ஆய்வாளரையும் தகாத வார்த்தைகளால் மிரட்டும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அரசு மருத்துவமனையில் தன்னை காவலர்கள் தாக்கியதாக கூறி வழக்கறிஞர் சிகிட்சை பெற்று வரும் நிலையில்.. உதவி ஆய்வாளர் வள்ளியம்மாள் , மற்றும் தலைமை காவலர் காளியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 

தன்னையும், காவலர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக கூறி.. வீடியோவை வெளியிட்டு  வழக்கறிஞர் சங்கத்தினரும், மாவட்ட காவல்துறையும் தனக்கு உதவ வேண்டுமென உதவி ஆய்வாளர் வள்ளியம்மாள் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

குடிபோதையில் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் அநாகரிகமாக நடந்து கொண்ட  வீடியோ பதிவு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது,

மாவட்ட நீதித்துறை தலையிட்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

பாளையங்கோட்டை காவல்  
உதவி ஆய்வாளர்
வள்ளியம்மாள் மற்றும்
தலைமை காவலர்
காளியப்பன்  மீது வழக்கு பதிவு ; palai PS Cr.No 78/2020  u/s 294 b, 324,506 ii ipc & 3 i x Sc st act