காவலர்கள் நடித்த காவலன் SOS குறும்படம் மாநகர காவல் ஆணையாளர் & துணை ஆணையாளரும் 02/02/2020 அன்று வெளியிடுகின்றனர்...
Safety உங்கள் Choice .,
காவலன் SOS குறித்த விழிப்புணர்வு குறும்படம்.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் டாமோர் , துணை ஆணையாளர் சரவணன் வெளியிடுகின்றனர்.

பெண்கள் பாதுகாப்பு குறித்தும், காவலன் SOS குறித்த விழிப்புணர்வு எற்படுத்த..மாநகர காவல்துறை துணை ஆணையர் மற்றும் நல்லதை பகிர்வது நம் கடமை வாட்ஸ் குழுவினரும் இணைந்து safety உங்கள் Choice என்ற குறும்படத்தை தயாரித்து உள்ளனர்.
இதன் வெளியீட்டு விழா வரும் ஞாயிறு காலை 10 மணி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறுகின்றது, மாநகர காவல் ஆணையர் தீபக் டாமோர் வெளியீட்டு வாழ்த்துரை வழங்குகிறார்.
பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்,விழா ஏற்பாடுகளை மாநகர காவல்துறையினர் மற்றும் நல்லதை மட்டும் பகிர்வோம் வாட்ஸ் அப் குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் செய்து வருகின்றனர்.


Comments (0)
Facebook Comments (0)