காவல் துறை செயல்பாடுகளில் முன்னோடியாக அசத்தும் காவல் கண்காணிப்பாளர் V.R.சீனிவாசன்...
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பாக E.Beat அறிமுகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 30 / 09 / 2021- இன்று காலை நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள Modern Control Room -ல் E Beat என்ற செயலியை மாவட்ட கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் துவக்கி வைத்தார் . இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் S.P. லாவண்யா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன் , ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் உடனிருந்தனர் .
பட்டா புத்தகத்திற்கு பதிலாக E Beat app மூலமாக அந்த Beat location சென்று E Beat ஆப் மூலமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்கேன் செய்து துல்லியமாக கண்காணிக்க முடியும் .
திண்டுக்கல் நகர் உட்கோட்டத்தில் 129 இடங்களிலும் , திண்டுக்கல் ஊரக உட்கோட்டத்தில் 312 ஆக மொத்தம் 441 இடத்தில் Beat location இன்று அறிமுகப்படுத்த உள்ளனர் . கூடிய விரைவில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1508 இடங்களில் Beat location அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் .
சு.பாண்டித்துரை,மாவட்ட நிருபர்.


Comments (0)
Facebook Comments (0)