கடலூரில் அதிரடியாக ஒரே நாளில் 778 குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை...
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் IPS அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டம் முழுவதும் 23.09.2021 காலை 8.00 மணி முதல் 24.09.2021 காலை 8.00 மணி வரை காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடிகள் , கொலை , கொள்ளை , கற்பழிப்பு போன்ற குற்ற வழக்குகளில் தொடர்புடைய 778 குற்றவாளிகளின் வீடுகளின் அதிரடி சோதனை ( Storming Operation ) மேற்கொள்ளப்பட்டது .
இந்த அதிரடி சோதனையின்போது ரவுடிகள் வீட்டில் உள்ளனரா , இல்லையென்றால் தற்போது எங்கு உள்ளார் , என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறார் , குடும்ப உறுப்பினர்களின் விபரம் , நண்பர்களின் விபரம் , போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டன . மேலும் இந்த அதிரடி சோதனையில் 8 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர் . கத்தி , அருவாள் போன்ற 27 ஆயுதகள் கைப்பற்றப்பட்டன .
34 ரவுடிகள் நன்னடத்தை உறுதிமொழி பிணைபத்திரம் கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . மேலும் மாவட்டம் முழுவதும் போதைபொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . மேலும் இந்த அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


Comments (0)
Facebook Comments (0)