கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத் தலைவர் M.S. முத்துசாமி , இ.கா.ப அலுவலகத்தில் சரக அளவிலான குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது...
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி , கோயமுத்தூர் காவல் சரகத்திற்குட்பட்ட கோயமுத்தூர் , ஈரோடு , திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள காவல் துறையைச் சார்ந்த களப்பணியாளர்களுக்காக " உங்கள் துறையில் முதலமைச்சர் ” திட்டத்தின் கீழ் 30.09.2021 இன்று சரக அளவிலான குறைதீர்க்கும் முகாம் கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத் தலைவர் M.S. முத்துசாமி , இ.கா.ப அவர்களின்அலுவலகத்தில் நடைபெற்றது . 10.30 மணி முதல் 01.30 வரை நடைபெற்ற இம்முகாமில் நான்கு மாவட்டங்களையும் சார்ந்த காவல் களப்பணியாளர்கள் கலந்து கொண்டு , தங்களது பணிமாறுதல் மற்றும் பல்வேறு குறைகள் தொடர்பான மனுக்களை கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத் தலைவரிடம் நேரடியாக சமர்ப்பித்தனர் . அம்மனுக்கள் அவ்விடத்திலேயே பரிசீலிக்கப்பட்டு , தகுதியின்படி , காலை நண்பகல் 138 குறைகளை களைய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகள் காவல் துறை துணைத் தலைவரால் உடனடியாக உரிய அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது .


Comments (0)
Facebook Comments (0)