மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் என்ற திட்டத்தை இன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப துவக்கி வைத்தார்...
சென்னை அண்ணாநகர் பகுதியில் மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்” (Happy Streets) நிகழ்ச்சியை மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் காவல் ஆணையாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில் துவக்கிவைத்தார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக சென்னை மாநகரம் முழுவதும் 8 இடங்களில் ஒரு வருட நிகழ்ச்சியாக “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்” (Happy Streets) என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதை முன்னிட்டு அண்ணாநகர் 2வது அவென்யூ, OMR, ராஜீவ் காந்தி சாலை, அடையாறு, காந்தி நகர் 4வது பிரதான சாலை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ் கான் சாலை, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலை, கீழ்ப்பாக்கம், ஆர்ம்ஸ் சாலை, கே.கே.நகர், லட்சுமணன் சாமி சாலை, மற்றும் காமராஜர் சாலை ஆகிய எட்டு சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை, போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு 3 மணி நேரம் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் ஐந்து வாரங்களுக்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
முதல் நாள் ஹேப்பிஸ்ட்ரீஸ் (Happy Streets) நிகழ்ச்சியை மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு. திரு.மா.சுப்பிரமணியன், அவர்கள் இன்று (17.07.2022) காலை 06.00 மணியளவில் சென்னை, அண்ணாநகர் 2வது அவென்யூவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங்பேடி, இ.ஆ.ப, அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து சாலைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் - நோக்கங்கள் தொடர்பான பாட்டு, இசை நிகழ்ச்சி, ஏரோபிக்ஸ், ஜூம்பா, யோகா, சைக்கிள் ரெய்டு, ஸ்கேட்டிங், சாக் ரேஸ், கயிறு இழுத்தல், டிராம்போலைன், கைப்பந்து, பூப்பந்து, டார்ட் போர்டு மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் கபில்குமார் சி சரத்கர், இ.கா.ப (போக்குவரத்து), இணை ஆணையாளர்கள் ராஜேந்திரன், இ.கா.ப (போக்குவரத்து தெற்கு)ராஜேஸ்வரி, இ.கா.ப, (மேற்கு) காவல் அதிகாரிகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Jpr,chennai.


Comments (0)
Facebook Comments (0)