காவலருக்கு உதவிய  பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்...

காவலருக்கு உதவிய  பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்...

சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் காவலருக்கு உதவிய  பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணி புரியும் 2013ஆம் பேட்ச் காவலர்  அன்பரசன் என்பவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் சிகிச்சை மேற்கொள்ள போதிய தொகை இல்லை என்பதை அறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளை வழங்கினார்கள். அந்த தொகையானது இன்று ரூபாய் 1,01,050/- மாறியது. மேற்படி தொகையினை அன்பரசனின் தாயார் அவர்களிடம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் IPS .,வழங்கினார்கள்.நண்பர் அன்பரசன் அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவி தொகை வழங்கிய பெரம்பலூர் மாவட்ட 2013 பேட்ச் நண்பர்கள் , நல்லுள்ளங்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.