உயிரிழந்த உதவி ஆய்வாளரின் திருவுருவ படத்திற்கு காவல் ஆணையாளர் மலரஞ்சலி செலுத்தினார்...
சென்னை பெருநகர காவல், இ2 யானை கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் சக்திவேல் கொரோனா பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் ,இ.கா.ப., அவர்கள் இன்று (19.4.2021) மாலை இ5 கொத்தவால் சவாடி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த உதவி ஆய்வாளர் சக்திவேல் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் கூ.செந்தில்குமார், இ.கா.ப (வடக்கு), மருத்துவர் N.கண்ணன், இ.கா.ப (தெற்கு) ஓ.பவானீஸ்வரி, இ.கா.ப (போக்குவரத்து) இணை ஆணையாளர்கள் .க.ஓ.செந்தில்குமாரி, இ.கா.ப (போக்குவரத்து தெற்கு) ஓஎழிலரசன், இ.கா.ப (போக்குவரத்து வடக்கு) துணை ஆணையாளர்கள் மருத்துவர்.தீபாசத்யன், இ.கா.ப, (போக்குவரத்து தெற்கு).ஓ.பாலகிருஷ்ணன்,இ.கா.ப (போக்குவரத்து கிழக்கு) .M.M.அசோக்குமார் (போக்குவரத்து மேற்கு) கு.மகேஷ்வரன், இ.கா.ப (பூக்கடை) கீ.கிருஷ்ணராஜ், இ.கா.ப (மாதவரம்), உதவி ஆய்வாளர் குடும்பத்தினர் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.


Comments (0)
Facebook Comments (0)