நெல்லையில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி...

நெல்லையில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி...

நெல்லை மாநகர பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படவும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அன்பு IPS., உத்தரவின் பேரில் மாநகர துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் தலைமையில் , காவல் உதவி ஆணையர்  சதிஷ் குமார்  முன்னிலையில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

நெல்லை டவுன் அருணகிரி திரையரங்கம் முன்பு தொடங்கிய அணிவகுப்பு பேரணி TMC காலணி, பாப்பாத்தெரு, மகிழ்வண்ணநாதபுரம், பாட்டப் பத்து வரை நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் பொதுமக்களிடம் அச்சமின்றி வாக்களிக்க கோரியும், தேர்தல் விழிப்புணர்வு குறித்தும் பேசினார்.

காவல் துணை ஆணையர் முன்பு பொதுமக்கள், காவலர்கள் வாக்களிப்பது நமது கடமை,
100 % சதவிகிதம் வாக்களிப்போம் என உறுதி மொழி ஏற்று கொண்டனர்.வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் நெல்லை டவுன் காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி, மற்றும் துணை ரானுவ படையினர், காவலர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.